விந்தை

இயம்ப யியலா விந்தை விந்தை !
இரவும் பகலும், கடலும் நிலமும்,
கதிரும் நிலவு முடலு முயிரும்,
அதிச யமாயிணைந் தியங்கும் விந்தை !

அணுவின் மின்னி களும ளவிலா
அகிலத் தில்தவ ழும்தா ரகமும்,
கணங்க ளின்கிர கங்களும் மௌனமாய்ப்
பினக்க மின்றிச் சுழலும் விந்தை !

பாலை முள்ளும், மலையின் முகடும் ,
காடும் மரமும், வேரும் நீரும்
தேனும் தீங்கனி யும்கொடு விலங்கும்,
கூடி வாழும் பாரது விந்தை !

யாழும் பண்ணும், வில்லும் நாணும்
பொலொன் றிணைந்த யியற்கை கண்டும் ,
ஈன மாடுடர் தம்சிறு புத்தி
வேற்றுமை விந்தை யில்விந் தையே !